உருளை கிழங்கு , பட்டாணி குருமா:
தேவை:
1 . உருளை கிழங்கு – 2 (Medium size )
2.பட்டாணி – 100 gm ( 4 மணிநேரம் ஊற வைத்தது)
3.பெரிய வெங்காயம் – 2
4.தக்காளி – 1
5.பச்சை மிளகாய் – 4
6.பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 tsp
7.துருவிய தேங்காய் – 1 cup
8.பொட்டுக்கடலை – 50 gm
9.இஞ்சி , பூண்டு விழுது – 1 1 /2 tsp
10.பூண்டு – 4 பல்
11.புளி – நெல்லிக்காய் size
12.உப்பு – தேவையான அளவு
13.மஞ்சள் தூள் – 1 /4 tsp
14.கொத்தமல்லி இழை – தேவையான அளவு
15.பட்டை , கிராம்பு , ஏலக்காய் – தாளிக்க
செய்முறை:
1 .Pressure cookerல் 2 whistle வரை , பட்டாணியையும், உருளை கிழங்கையும் வேக வைக்கவும்.
2.வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, 1 பெரிய வெங்காயத்தை வதக்கவும், வெங்காயம் பொன்னிரமானதும்,இஞ்சி பூண்டு விழுது,தக்காளி , பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, பெருஞ்சீரகம், துருவிய தேங்காய் என ஓவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும் . அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்
3.ஆறியபின், புளி அல்லது lemon சேர்த்து Mixer ல் மசியும் வரை அரக்கவும்
4.வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்,வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்,வதங்கிய பின் , அரைத்து வைத்துள்ளதை சேர்க்கவும், பின் உப்பு, மஞ்சள்த்தூள், பட்டாணி , உருளைக்கிழங்கு சேர்த்து 4 கொதி வந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் .
சுவையான உருளை கிழங்கு , பட்டாணி குருமா ready !!!
Serving Size : 2 persons
gonna send this to my mom