Archive

Archive for the ‘திரைப்படம்’ Category

songs that remind you…..most

My love failure playlist

—————————-

unnarugil varugayil….          Film : Kalloori

yaaro manathile….                Film : Dhaam dhoom

Po nee po …                            Film :3

kannalaga …                           Film :3

New york nagaram …           Film :Jillunnu oru kadal

pirai thedum …..                    Film :Mayakkam enna

venmathi venmathiye….      Film :Minnale

ovvoru padalilum _ Sad …  Film :Ennavale

Mandram vantha ……           Film :Mouna raagam

anbe anbe en anbe…             Film :Nenjinile

Nee kosam …                          Film:Desamuduru

Neeya pesiyathu…                 Film:Thirumalai

vazhve maayam …                 Film:vazhve maayam

YedhedhoEnnangal…           Film:Pattiyal

nee illai nillal illai…              Film:Poochoodava

Ninaivugal nenjinil…           Film:Authograph

unakkena iruppen…            Film:Kadhal

Nammaka_Thappani….     Film:Bommarillu

Tuhi Meri Shab..                 Film:Gangster

OSaathiRe…                         Film:Omkara

unna nenaichen…               Film:Aboorava sagotharargal

Vidigindra Pozhudhu…     Film:Raam

Sundari Kannal…               Film:dhalapathi

…..list goes on….

 

Advertisements

The Promise

 தி ப்ராமிஸ் (சீன மொழி படம்),
கதையின் கரு: நம்பிக்கை துரோகத்தின் வலி
கதை:
முதல் காட்சி:
             போர்களத்தில் ஒரு சிறு பெண் பசிக்காக உணவை தேடுகிறாள், ஒரு ரொட்டி துண்டு அவளுக்கு கிடைகிறது, அந்த சமயத்தில் ஒரு சிறுவன் அவளை கயிற்றில் கட்டிவிட்டு அந்த ரொட்டி துண்டை பறித்து கொண்டு போகிறான், சிறுமி அவனிடம் தன்னை விடுவிக்குமாறு கெஞ்சி கேட்கிறாள், ஆனால் அவனோ, “நீ எனக்கு காலம் முழுவதும் அடிமையாக இருக்கிறேன் என்று சத்தியம் செய் உன்னை விடுவிக்கிறேன்” என்கிறான்.அவளும் அப்படியே என்று சத்தியம் செய்கிறாள்.உடனே சிறுவன் அவளை விடுவிக்கிறான், விடுவித்த அடுத்த கணம், அவள் அவனை தாக்கி விட்டு, ரொட்டி துண்டையும் எடுத்துக்கொண்டு ஓடி விடுகிறாள். சிறுவன் அவளிடம் சத்தமாக, “இந்த ஏமாற்றத்தை அவன் வாழ்நாள் முழுவதும் மறக்கபோவதில்லை” என்று கூறுகிறான்.
               சிறுமி வேகமாக ஓடி ஒரு சிறு ஓடையை கடக்கும் போது அந்த ரொட்டி துண்டு ஓடையில் விழுந்து விடுகிறது, அவளும் அங்கேயே அமர்ந்து அழதொடங்குகிறாள், அந்த சமயத்தில் ஒரு தேவதை அவள் முன்னே தோன்றி அந்த ரொட்டி துண்டை  சிறுமியிடம் கொடுத்து உண்ண சொல்கிறாள். ஆனால் சிறுமி அதை பத்திர படுத்தி வைக்கிறாள்,தேவதை ஆச்சர்யபட்டு ஏன் பத்திரபடுத்தி வைக்கிறாய் என்று வினவினாள், அதற்கு சிறுமி தன் தாய்க்காக என்று கூறுகையில், தேவதையோ அதற்கு அவசியமில்ல,உன் தாய் இறந்துவிட்டாள், நீயே அதை எடுத்துக்கொள் என்கிறாள். பிறகு தேவைதை அவளுக்கு ஒரு வரம் அளிக்கிறாள், அதாவது ” நீ காலம் முழுவதும் அழகிய ஆடைகளுடன், விலை உயர்ந்த பொருட்களுடன், எல்லோரும் உன்னை பார்த்து வியக்கும் அளவுக்கு திறமைகளுடன் வாழலாம், ஆனால்  ஒரு குறுப்பிட்ட கால கட்டத்திற்கு முன்னர் நீ யாரையேனும் நேசித்தால், நீ நேசித்தவன் உடனே இறந்து விடுவான்”, சிறுமியும் இந்த வரத்தை ஏற்று கொள்கிறாள்.
முதல் காட்சியின் சிறப்பு:
                 சிறுமியின் போராட்டம்
                 தேவதையின் வடிவமைப்பு
இரண்டாம் காட்சி:
               போரின் தளபதி, போருக்கான அனைத்து ஆயதங்களையும் செய்கிறார், அதில் ஒரு பகுதியாக 133 அடிமைகளை  விலைக்கு வாங்குகிறார்,அதாவது அவரது திட்டம் என்னவென்றால், இந்த அடிமைகளை முன் அனுப்பி எதிரியின் முதல் படையான எருமை படையை அழிப்பது.இந்த 133 அடிமைகளில் ஒருவனாய் கதையின் நாயகன் அறிமுகம்.நாயகன் இந்த அடிமைகூட்டது தலைவனின் மிக சிறந்த சேவகன்.
                    அடிமைகூட்டத்து தலைவன் நாயகனிடம், நாயகனின் உயிரை பணயம் வைத்தேனும்,இந்த போரிலிருந்து தன்னை காப்பற்றவேண்டுமேன்று கட்டளை இடுகிறான்.அதற்க்கு நாயகனும் சம்மதிக்கிறான்.
                   நாயகனுக்கு மின்னல் வேகத்தில் ஓடும் அபார சக்தி உண்டு, அதனால் எதிரிகளின் எருமைகள் துரத்தும்பொழுது, தன் தலைவனை முதுகில் சுமந்துகொண்டு மின்னல் வேகத்தில் ஓடுகிறான். இவன் ஓட்டத்தில் எருமைகள் அனைத்தும் இவர்களின் சேனை பக்கமே திரும்ப ….இவர்களின் சேனையே அடிமைகளை நோக்கி வில் எய்கிறார்கள். அதனால் நாயகன் மிகவும் வேகமாக ஓடி எருமை படையெய் எதிரிகளின் படை நோக்கி திருப்பி விடுகிறான்.மற்றும் கடைசியில் இவர்களே போரில் வெற்றியும் அடைகிறார்கள்.
இரண்டாம் கட்சியின் சிறப்பு:
                 நாயகனின் அர்பாட்டமில்லா அறிமுகம்
                 சேனையின் அணிவகுப்பு
                 நாயகனின் மின்னல் வேக ஓட்டம்
மூன்றாம் காட்சி:
                  இவர்களின் சேனை வெற்றி அடைந்ததுகூட தெரியாமல், தன் தலைவனை சுமந்துகொண்டு நாயகன் வேகமாக ஓடிகொன்டிருகிறான், போரின் தளபதி போரை முடித்துவிட்டு அவ்வழியே தன் குதிரையில் வருகிறான்,நாயகனின் திறமையை போரில் பார்த்ததும், அடிமைகூட்டது தலைவன் மீது வில் எய்ததும் நினைவுக்கு வந்தது,அப்பொழுது நாயகனிடம்  “உன் தலைவன் இறந்துவிட்டான், அவனை இனி நீ சுமப்பதால் எந்த பயனும் இல்லை” என்கிறான்.
                பிறகு தன் தலைவனை புதைக்கும் வேலையில் இறங்குகிறான், அப்பொழுது போரின் தலைவன், நீ எனக்கு அடிமையை இருக்கிறய என்று நாயகனிடம் வினவுகிறான். அடுத்த கணமே நாயகனும் அதற்க்கு சம்மதிக்கிறான்
               ஏன் நீ எனக்கு அடிமையாய் இருக்க விரும்புகிறான் என்று தளபதி கேட்டதற்கு, உங்களுக்கு நான் அடிமையை இருந்தால் எனக்கு மூன்று நேரமமும் உணவு கிடைக்கும் என்கிறான்.
              இவர்கள் போரில் வெற்றி அடைந்தாலும் இவர்களின் மன்னன் எதிரி மன்னனிடம் மாட்டிகொண்டிருப்ப்பதால், அவனை காப்பாற்ற போரின் தளபதியும் நாயகனும் புறபடுகிறார்கள். இரவு நேரமாகிவிடுகிறது, அதனால காட்டில் வலி தெரியாமல் அலைகிறார்கள், பின்னர் தளபதி, நாயகனிடம் நீ ஒரு வழியில் செல், நான் ஒரு வழியில் செல்கிறேன், முதலில் யார் இந்த காட்டை கடகிறொமோ,அவர் இன்னோருவருக்கு வழிக்காட்டலம் என தனி தனியே செல்கிறார்கள்.
            அப்பொழுது தளபதியின் வழியில், ஒரு பெண் நின்றிருப்பதை காண்கிறான். அவளிடம் பயபடதே நான் அப்பாவிகளை கொள்வதில்லை,உன்னை கொள்ளமாட்டேன், இங்கு என்ன செய்கிறான் என்று கேட்கிறான்.அதற்க்கு அந்த பெண் நீயா அப்பாவிகளை கொள்ள மாட்டாய், அப்படியானால் உன்னால் போரில் இறந்த 132 அடிமைகளும் அப்பாவிகள் தானே என்று கூறுகிறாள்….இந்த பெண் வேறு யாருமல்ல, முதலில் அந்த சிறுமியிடம் பேசிய தெய்வம் தான்.  தளபதியின் கர்வத்தை அடக்க எதிர்காலத்தில் நடக்க போவதையும், இந்த போரே தளபதியின் கடைசி வெற்றி போர் எனவும் கூறுகிறாள்.
 இதற்கு மேல் கதையை சொன்னால் பார்க்கும் பொழுது சுவாரசியமாக இருக்காது…அதனால் நான் இப்பொழுதே முற்றுப்புள்ளி வைத்துக்கொள்கிறேன்…i am so lazy to type the complete story…….