Archive

Archive for the ‘சமையல்’ Category

காரட் வறுவல்

தேவை
1.காரட் – 2 (வட்டமாக நறுக்கவும்)
2.வெங்காயம் – 1 (medium size)
3.இஞ்சி, பூண்டு விழுது – 1 tsp
4.துருவிய தேங்காய் – 1 cup
5.சோம்பு – 1 /4 tsp
6.கடுகு, கருவேப்பிலை,உளுத்தம் பருப்பு , உப்பு , மஞ்சள் தூள் – தேவையான அளவு
7.மிளகாய் தூள் – 1 /2 தசப்
8.கொத்தமல்லி(தனியா) தூள் – 1 /2 tsp

செய்முறை:
1.வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு ,உளுத்தம் பருப்பு ,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
2.பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிரமானபின், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
3.காரட் சேர்த்து நன்றாக வதங்கிய பின் உப்பு , மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்க்கவும் .
4.தேங்காய், சோம்பை சேர்த்து mixer ‘ல் நன்றாக அரைக்கவும்.
5.தேங்காயை , காரட் வறுவலில் சேர்க்கவும்.
6.காரட் நன்றாக வதங்கியதும் இறக்கவும்

Seriving Size : 2 persons

Categories: சமையல்

உருளை கிழங்கு , பட்டாணி குருமா:

September 20, 2010 1 comment

தேவை:
      1 . உருளை கிழங்கு – 2 (Medium size )
      2.பட்டாணி – 100 gm ( 4 மணிநேரம் ஊற வைத்தது)
      3.பெரிய வெங்காயம் – 2
      4.தக்காளி – 1
      5.பச்சை மிளகாய் – 4
      6.பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 tsp
      7.துருவிய தேங்காய் – 1 cup
      8.பொட்டுக்கடலை – 50 gm
      9.இஞ்சி , பூண்டு விழுது – 1 1 /2 tsp
      10.பூண்டு – 4 பல்
      11.புளி – நெல்லிக்காய் size
      12.உப்பு – தேவையான அளவு
      13.மஞ்சள் தூள் – 1 /4 tsp
      14.கொத்தமல்லி இழை – தேவையான அளவு
      15.பட்டை , கிராம்பு , ஏலக்காய் – தாளிக்க

செய்முறை:
      1 .Pressure cookerல் 2 whistle வரை , பட்டாணியையும், உருளை கிழங்கையும் வேக வைக்கவும்.
      2.வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, 1 பெரிய வெங்காயத்தை வதக்கவும், வெங்காயம் பொன்னிரமானதும்,இஞ்சி பூண்டு விழுது,தக்காளி , பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, பெருஞ்சீரகம், துருவிய தேங்காய் என ஓவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும் . அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்

      3.ஆறியபின், புளி அல்லது lemon சேர்த்து Mixer ல் மசியும் வரை அரக்கவும்

      4.வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்,வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்,வதங்கிய பின் , அரைத்து வைத்துள்ளதை சேர்க்கவும், பின் உப்பு, மஞ்சள்த்தூள், பட்டாணி , உருளைக்கிழங்கு சேர்த்து 4 கொதி வந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் .

சுவையான உருளை கிழங்கு , பட்டாணி குருமா ready !!!

Serving Size : 2 persons

Categories: சமையல்

புதினா சட்னி

புதினா சட்னி
=============
தேவை:
—————–
௧.புதினா – ஆய்ந்தது – 1 கட்டு
௨. தேங்காய் – துருவியது – 1 /4 cup
௩.கடுகு , உளுத்தம் பருப்பு , எண்ணெய்
௪. புளி – நெல்லிக்காய் size
௫.உப்பு – தேவையான அளவு
௬. பச்சை மிளகாய் -2

செய்முறை:
———————-
௧.அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் – 2 tsp ஊற்றவும்
௨.கடுகு , உளுத்தம் பருப்பு,பச்சை மிளகாய் சேர்க்கவும்
௩. கடுகு வெடித்த பின் , புதினாவை சேர்த்து வதக்கவும்
௪. புதினா சிறிது வதங்கிய பின் , தேங்காய் சேர்த்து வதக்கவும்
௫.5 நிமிடம் கழித்து , கடாயை இறக்கி ஆறவைக்கவும்
௬. ஆறிய பின் , உப்பு , புளி சேர்த்து , mixer ல் அரைக்கவும்
௭. புதினா சட்னி ரெடி

Categories: சமையல்

பொட்டுக்கடலை சட்னி

பொட்டுக்கடலை சட்னி
======================
தேவை:
—————
௧.தேங்காய் -துருவியது- 1 /4 cup
௨.பொட்டுகடலை – 50 gm
௩. பச்சை மிளகாய் – 2
௪.புளி – கொஞ்சமாக
௫.உப்பு
௬.கடுகு, கறிவேப்பிலை , உளுத்தம் பருப்பு , எண்ணெய் – தாளிக்க

செய்முறை :
———————–
௧.mixer ல் , துருவிய தேங்காய் , பொட்டுகடலை , பச்சை மிளகாய் , புளி , உப்பு சேர்த்து, நீர் விட்டு அரக்கவும்
௨.அரைத்ததை ஒரு சிறிய பாத்திரத்தில் கொட்டவும்
௩. அடுப்பில் தாளிக்கிற கரண்டி வைத்து , எண்ணெய் -2 tsp , கடுகு , உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
௪.தாளித்ததை , சட்னி பாத்திரத்தில் கொட்டி கலக்கவும்
௫.பொட்டுகடலை சட்னி ரெடி
இட்லி , தோசைக்கு நன்றாக இருக்கும்

serving size :2 persons

Categories: சமையல்

உருளைக்கிழங்கு மசியல்

உருளைக்கிழங்கு மசியல்
=========================
தேவை:
————-
௧.உருளைக்கிழங்கு – 2
௨.பச்சை/காய்ந்த மிளகாய் -2
௩.பெரிய வெங்காயம் – 1
௪.கடுகு, எண்ணெய், கறிவேப்பில்லை ,உளுத்தம் பருப்பு , உப்பு
௫.மஞ்சள் தூள்

செய்முறை:
——————–
௧.உருளைகிழங்கை நன்கு கழுவி, pressure cooker ல் 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்
௨.பெரிய வெங்காயம், மிளகாயை நறுக்கி வைத்துகொள்ளவும்
௩.அடுப்பில் கடாய் வைத்து , எண்ணெய் – 2 tsp , கடுகு , உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை சேர்க்கவும்
௪.கடுகு வெடித்தபின் , மிளகாய், வெங்காயம் சேர்க்கவும்
௫. வெங்காயம் பொன்னிறமானதும்,மஞ்சள் தூள், உருளைகிழங்கை தோல் எடுத்து மசித்து , கடாயில் போடவும்
௬. 5 நிமிடம் கழித்து, அடுப்பை நிறுத்தவும்.
சூடான சாதம்+ ரசத்துடம் , உருளைக்கிழங்கு மசியல் நன்றாக இருக்கும்

serving size : 2 persons

Categories: சமையல்

தக்காளி ரசம்:

தக்காளி ரசம்:
=============
தேவை:
—————
௧.தக்காளி – 1
௨. புளி – நெல்லிக்காய் size
௩.பூண்டு – 4 பல் or more
௪.சீரகம் – 1 tsp
௫.மிளகு – 1 1 /2 tsp
௬.காய்ந்த மிளகாய் -3
௭. கடுகு, கறிவேப்பிலை , எண்ணெய்
௮.மஞ்சள் தூள் – a pinch

செய்முறை:
——————–
௧. புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும்
௨.பூண்டு உரித்து வைக்கவும்
௩.சீரகம், மிளகு, பூண்டு இடித்து வைக்கவும்
௪.அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் – 2 tsp ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும்
௫.கடுகு வெடித்தபின், மிளகாய் , இடித்து வைத்துள்ள சீரகம், மிளகு, பூண்டு சேர்க்கவும்
௬. சிறிது வதங்கியபின், தக்காளியை கையால் மசித்து சேர்க்கவும்
௭.புளி கரைசல், மஞ்சள் தூள் சேர்க்கவும்
௮. கொதி வந்த பின்,5 நிமிடம் கழித்து இறக்கவும்.

serving size: 2 persons

Categories: சமையல்

தக்காளி சட்னி

தக்காளி சட்னி
===============
தேவை:
————–
௧.தக்காளி – 1
௨.பெரிய வெங்காயம் -1
௩. பச்சை/காய்ந்த மிளகாய் – 2 (தேவையான அளவு)
௪. கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய்
௫.புளி – a pinch , உப்பு – தேவையான அளவு

செய்முறை:
——————–
௧.தக்காளி, வெங்காயம் , மிளகாயை நறுக்கி வைக்கவும்
௨. அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் – 2 tsp ஊற்றவும்
௩. கடுகு , உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை, மிளகாய் சேர்க்கவும்
௪.கடுகு வெடித்தவுடன், வெங்காயம் சேர்த்து பொன்னிரமானபின், தக்காளியை சேர்க்கவும்.
௫. தக்காளி நன்கு வதங்கிய பின், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்
௬. ஆறியபின், Mixer ல், உப்பு , புளி சேர்த்து அரைக்கவும்
தக்காளி சட்னி ரெடி , இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்

serving size : 2 persons

Categories: சமையல்

தண்டு கீரை பொறியல்

தண்டு கீரை பொறியல்
======================
தேவை:
—————
௧. தண்டு கீரை – 1 கட்டு – ஆய்ந்தது
௨. வெங்காயம் 1 ஓர் 1 /2
௩. காய்ந்த மிளகாய் – 3 or தேவையான அளவு
௪. கடுகு, எண்ணெய், உளுத்தம் பருப்பு, உப்பு
௫. தேங்காய் – துருவியது – 1 /4 cup (தேவையான அளவு)

செய்முறை:
——————–
௧. தண்டு கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து வைக்கவும்(clean and chop it )
௨.அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் – 2 tsp ஊற்றவும்
௩.கடுகு , உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்
௪. கடுகு வெடித்ததும், வெங்காயம் சேர்க்கவும்
௫. வெங்காயம் பொன்னிறமானதும், தண்டு கீரையை சேர்க்கவும்
௬. கீரை வதங்கியபின், உப்பை போடவும்
௭. இறக்குவதற்கு முன் தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்

சூடான சாம்பார் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்

Serving Size: 2 persons

Categories: சமையல்